நுவரெலியாவில் கரட் கிலோ ஒன்றின் விலை 200 ரூபாய் வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் தெரிவித்துள்ளது.
நேற்று வரை 850 ரூபாய்க்கு மொத்த விற்பனை விலையில் காணப்பட்ட கரட் ஒரு கிலோவில் விலை இன்று 650 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்து கரட் உள்ளிட்ட சில மரக்கறிகள் கடந்த இரண்டு தினங்களாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தைக்கு தாராளமாக கிடைப்பதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
தற்போது மரக்கறிகளுக்கான தட்டுப்பாடுகள் குறைந்து வருவதுடன் விலைகளும் குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நுவரெலியா சந்தையில் இன்று கோவா ஒரு கிலோ 520 ரூபாய்க்கும், கரட் ஒரு கிலோ 650 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோ 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
மேலும், ராபு ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 470 ரூபாய் முதல் 570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.