இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களும், கிருமிநாசினிகளும் நேற்று வவுனியா, பம்பைமடுப்பகுதியில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டன.
‘அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், கிருமிநாசினிகளுமே ‘ இவ்வாறு மேலதிக நீதவான் ஜெ. சுபாஜினி மற்றும், சிங்கள பிரதேசசபை செயலாளர், விமலவேணி நிசங்க,சுகாதாரபரிசொதகர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் கடந்த வருடம், ஏப்ரல் மாதம் வவுனியா தெற்குசிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.