யாழ்ப்பாணம- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா என்ற 49 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனக்குக் கிடைத்த இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ள நிலையில் அது பலனளிக்காததால் மனவிரக்தியில் இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.