முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
அதன்படி அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இன்னிலையில் அவர் ஊழல் எதிர்ப்பு கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவின் பிரதானியாகவும்’எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.