நாடு முழுவதும் எதிர்வரும் மார்ச் மாதம் ரெயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
டெல்லியை நோக்கிய விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , “தாம் டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் முடிவைத் திரும்பப் பெறப்போவது இல்லை எனவும், மார்ச் 6ஆம் திகதி பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லிக்கு வருகை தரவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மார்ச் மாதம் 10ஆம் திகதி நண்பகல் 12மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவசாய பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 13ஆம் திகதி முதல்டெல்லியை நோக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.