இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
அதன்படி கடந்த ஆண்டை விட கூட்டுத்தாபனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கப்பல்களுக்கு எரிபொருளை வழங்கும் நடவடிக்கையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டதாகவும், இது கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் கடந்த காலங்களில் எரிபொருள் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பணியின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொள்ளும் செலவினங்களின் அடிப்படையில் எரிபொருள் விலை சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது














