அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக, மாற்றுத் திறனாளிகளுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும், முதியோர் உதவி பெறும் நபர்களுக்கும் விசேட கொடுப்பனவை வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உதவி பெறும் மாற்று திறன்களைக் கொண்ட 410,000 பேருக்கு தலா 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும்,
சிறுநீரக உதவி பெறும் 50 ஆயிரம் பேருக்கு தலா 7,500 ரூபா கொடுப்பனவும், முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3,000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.