யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிலையானது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்த நிலையில்,புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்பட்டனர்.
இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் குறித்த புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.