கம்போடிய தலைநகர் நோம் பென்னில் உலக சாதனை படைக்கும் நோக்கில் மனைவியை நீண்ட நேரம் சுமக்கும் போட்டியொன்று நடைபெற்றது.
ஆணின் வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த குறித்தப் போட்டியில் 250 ஜோடிகள் பங்கேற்றிருந்தனர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்த இப் போட்டியிலிருந்து 245 ஜோடிகள் ஒருவர் பின் ஒருவராக விலகினர்.
இந்நிலையில், சுமார் 8 மணி நேரம் 20 நிமிடங்கள் தனது மனைவியை சுமந்து சாதனை படைத்தவருக்கு கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
அடுத்த 4 இடங்களையும் பிடித்த ஜோடிகளுக்கு பைக் பரிசாக அளிக்கப்பட்டது.