காணாமல் போனதாக கூறப்பட்ட கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியின் சடலம் எல்பிட்டிய – தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கரந்தெனிய தல்கஹவத்த, கங்கபாறை பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்று நேற்று (08) அவரை பலவந்தமாக அழைத்துச் சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.