மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வேலை நிறுத்தத்தமானது 8 மாடிக் கட்டிடத்தில் உடைந்த இரண்டு மின்தூக்கிகளை சீர் செய்யாமைக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இதேவேளை இந்த கட்டிடத்தை தினமும் 3000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர் என்றும் பொதிகளுக்கான மின்தூக்கி 5வது தளம் வரை மட்டுமே இயங்கும் என்றும், அங்கிருந்து அஞ்சலக ஊழியர்கள் தபால் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.