நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் காற்றானது வடகிழக்கு திசையில் வீசும் அதேவேளை, காற்றின் வேகம் மணிக்கு 20-30 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.