கனடாவில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கியூபெக் மாகாணத்தில் மாத்திரம் இவ்வாண்டில் சுமார் 8,500 ஆசிரியர் பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
ஆசிரியர் பதவி வகிப்பதற்கான தகமையுடைய தொழில்சார் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பலர் ஆசிரியராக கடமையாற்ற விரும்பாதமையே இதற்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், ஆசிரியர் பதவி வெற்றிடங்களை சமாளிக்கும் வகையில், பாடசாலை நிர்வாகங்கள் பூரண தகுதியற்றவர்களை ஆசிரியர் கடமையில் அமர்த்தியுள்ளதாகவும், இதனால் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கியூபெக் மாகாணத்தில், கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டில் ஆசிரியர்களாக பணியாற்றிய மூன்று இலட்சம் பேருக்கு ஆசிரியர் பதவிக்கான தகமை கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியப் பணியில் ஈடுபடுவோருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமையே அநேகமானவர்கள் ஆசிரிய தொழிலை விரும்பாதமைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.