”இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நம் தேசத்தில் இந்தியக் குடியுரிமையை உறுதி செய்வது இறையான்மை சார்ந்த உரிமை. அதில் எந்த சமரசமும் செய்யப்படாது. என்றும் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்து நாங்கள் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. எதிர்க்கட்சியினருக்கு வேறு வேலை ஏதும் இல்லை. அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. ஆனால் பிரதமர் மோடியின், பாஜகவின் வரலாறு வேறு.
மேலும் பாஜக சொல்வதும், பிரதமர் பேசுவதும் கல்வெட்டில் எழுதிய வார்த்தைகள் போன்றது. மோடியின் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்றும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நாங்கள் தேர்தலை சந்திக்கும் முன் நிறைவேற்றியுள்ளோம் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.