குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு இதனை மேற்கொள்ளுமாறு நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளை, தேசிய இடர் நிவாரண சேவை மையங்கள் மற்றும் நீர் போக்குவரத்து பிரிவுகளுடன் இணைந்து இந்த நிலைமையை தீர்ப்பதற்காக செயற்பட்டு வருவதாகவும் கேகாலை மற்றும் குருநாகலில் கிட்டத்தட்ட 3,000 குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.