தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பான தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் ஆகியோர் மீது கோயம்பேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.