நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.
ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதனிடையே, விருதுநகர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணிக்கு ஒதுக்குவதா என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தமைக்காக ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் நடிகர் சரத்குமார், 2007 இல் ஆரம்பத்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நடிகர் சரத்குமார், இம்முறை பாஜகவுடன் இணைத்து போட்டியிடுகின்றார்.
கடந்த 12 ஆம் திகதி சமத்துவ மக்கள் கட்சியை, வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம், பாடுபடுவோம் என கூறி அவர் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதையடுத்து, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமாரை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.