அப்பிள் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஐபோன் வாடிக்கையாளர்கள் அண்ட்ரொய்ட் போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம், அப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தெரிவித்து இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஐபோனில் இருந்து அண்ட்ரொய்ட் போன்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது ஏற்படும் சிரமங்கள், ஏனைய ஸ்மார்ட் வாட்ச்களை ஐபோன்களுடன் இணைத்து பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் அதிக விலை கொடுத்து ஐபோன்களை வாங்க வேண்டியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.