ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மொஸ்கோவில் இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதன் படி இசை அரங்கு ஒன்றில் நுழைந்த 5 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் மர்மநபர்கள் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
டெலிகிராமில் ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது எனினும் இந்த தாக்குதலைதான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.
மேலும் இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
ஐஎஸ் அமைப்பு ரஸ்யாவில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல்கள் நவம்பர் மாதம் முதல் கிடைத்தன என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.