முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன்படி, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணி அளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.