”தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பா.ஜ.க” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு மேலும் நாசமாகிவிடும் எனவும், பாஜக அரசு ஓரவஞ்சனையாகச் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.