கரையோர மார்க்கத்திலான ரயில்சேவையில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது
இதன்காரணமாக கரையோரமார்க்கத்தில் சுமார் 25 ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வெள்ளவத்தை மற்றும் கோட்டை ரயில்நிலையங்களுக்கிடையில் ஒருவழி ரயில்பயணம் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
வெள்ளவத்தை மற்றம் பம்பலப்பிட்டி ரயில்நிலையங்களுக்கிடையில் பராமரிப்பு காரணமாகவே இவ்வாறு ரயில்போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும் நாளைய தினம் இரவு வேளையில் ரயில்போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதனிடையே ஒன்iலைன் முறைமையினூடாக ரயிலில் ஆசனங்களை பதிவ செய்வதற்கு ரயில்நிலைய அதிபர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ரயில்நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது