நாடாராளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது
அதன்படி வங்கியியல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான உத்தரவுகள், பெறுமதி சேர் வரி சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் மீதான விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது.
மேலும் அரசாங்க நிதி தொடர்பான குழுவும், அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவும் இன்று கூடவுள்ளதுடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அரசாங்க கணக்கு குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.