தலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
அதன்படி சில அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது
மேலும் குறித்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்டிருந்த போது, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.