2014 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று இன்று (சனிக்கிழகையுடன்) 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அதன்படி லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி இந்த வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த இறுதிப் போட்டி, இலங்கை – இந்தியா இடையே வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்கா மற்றும் நுவான் குலசேகர ஆகியோர் யோகர் பந்துகளால் இந்திய துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தி இருந்தனர்.
பின்னர் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களம் இறங்கிய இலங்கை தொடக்க வீரர்களை 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
பின் யோடி சேர்ந்த மஹேல ஜயவர்தன 24 ஓட்டங்களையும், குமார் சங்கக்காரவும் திசர பெர்ராவும் 5ஆவது விக்கெட்டுக்கு 32 பந்துகளில் 56 ஓட்டங்களை முறியடிக்காமல் இணைத்து இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தனர்.
இதன்படி கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலங்கை அணி கடந்த 20-20 உலகக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.