நாட்டில் பண்டிகைக்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் வரத்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கையினை சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தெற்கின் முக்கிய வர்த்தக நகரமான காணப்படுகின்ற அக்குரஸ்ஸ நகருக்கு திடீர் சோதனையை முன்னெடுத்திருந்த சுகாதார வைத்திய அதிகாரி காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 22 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை நாளடாவிய ரீதியில் நேற்றையதினத்தில் மாத்திரம் 51 வர்த்தக நிலையங்கள் மற்றும் 22 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை சதொச விற்பனை நிலையங்களில் முட்டைக்கு தேவையான வெப்பநிலையில் முட்டைகள் பாதுகாக்கப்படவில்லை என்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.