நாட்டில் நாளை முதல் மழையுடனான காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இன்று நண்பகல் 12.11 மணியளவில் தம்புத்தேகம, மெதிரிகிரிய, மேல் புளியங்குளம், ராஜாங்கனை, எப்பாவல, வாகரை ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.