ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்துக்கள் மற்றும் சீக்கிய சமூகத்தினரின் சொத்துகளை மீட்டு அவர்களிடமே திருப்பி தர தலிபான் அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டை விட்டு இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் சிறுபான்மையினர் பலர் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது அபகரிக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி தர ஒரு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அரசு குறிப்பிட்டுள்ளது.