சில நாட்களாக சற்று குறைந்திருந்த உள்ளூர் முட்டை விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய் அலிவிஸ் தெரிவித்துள்ளார்
தற்போது உள்ளூர் முட்டையின் மொத்த விலை 50 ரூபாயாகவும், சில்லறை விற்பனையில் 55 ரூபாயாகவும் உள்ளது.எவ்வாறாயினும், இடைத்தரகர்கள் விலையை உயர்த்துவதாக அவர் தெரிவித்தார்
இதேவேளை முட்டையின் விலை உயர்த்தப்பட்டால் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை பண்டிகை காலத்தில் முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை தரவுகள் குறிப்பிடுகின்றன.