ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை முதல், மழையின் காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதுடன் அதிக மனித மற்றும் நிதி இழப்புகளை ஏற்படுத்தியது என திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஜனன் சயீக் நேற்று தெரிவித்தார்.
இதில் 600 வீடுகள் சேதமடைந்ததுடன் பெரும்பாலான உயிரிழப்புகள் கூரை இடிந்து விழுந்தில் ஏற்பட்டதாகவும் 200 கால்நடைகளும் அழிந்துள்ளது
மேலும் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் நாட்டின் 34 மாகாணங்களில் 20 மாகாணங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.