நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 8 விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புஸ்ஸல்லவாவை பண்டாரவளை மஹியங்களை கிரிந்திவெல பூகொட அம்பலாந்தோட்டை மாத்தறை மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் இவ்வாறு விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹல்தல்துவ தெரிவித்துள்ளார்
அத்துடன் குறித்த விபத்துக்களின் போது மேலும் 13 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புஸ்ஸல்லவாவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூவரின் பிரதேச பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.