நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.