உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இம் மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாசி வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி மாசி வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
இந்நிகழ்வைக் காண பெருந்திரளான மக்கள் மாசி வீதிகளில் திரண்டிருந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளை மறுநாள் 19ஆம் திகதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது
இந்நிலையில், சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வர் திருக்கல்யாண நிகழ்வு, எதிர்வரும் 21ஆம் நடைபெற உள்ளது.