சீனாவின் மிகப்பெரிய சரக்கு ரயில் சேயைான ஷூஜோ-ஹுவாங்குவாவின் (Shuozhou-Huanghua) சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக இடம்பெற்றது.
324 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலானது சுமார் 4 கிலோ மீற்றர் நீளம் கொண்டது எனவும், இதில் 4 மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் தொன் நிறை கொண்ட பொருட்களை குறித்த ரயில் மூலம் சுமந்து செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயிலானது ஷாங்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி தளத்தையும் இ ஹெபே மாகாணத்தில் உள்ள ஹுவாங்குவா துறைமுகத்தையும் நேரடியாக இணைப்பதாகவும், இதனால் நாட்டின் வர்த்தகம் மேலும் வளர்ச்சியடையும் எனவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.