பொலிஸாரும் புலனாய்வு அமைப்புகளும் அரசியலில் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அந்தோனியார் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய புலனாய்வு திணைக்களங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக மாறுவது பிரச்சினைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல் சேகரிப்பு நிறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேலும் இவ்வாறானதொரு சூழ்நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸ், புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஏனைய புலனாய்வு அதிகாரிகள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.