உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் குறித்த திட்டத்தைத் திறந்து வைப்பதற்காகவே ஈரான் ஜனாதிபதி இன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்துள்ளார்.
அந்தவகையில் உமாஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள அவர், இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின் பின்னர், ஈரான் – இலங்கை ஜனாதிபதிகளின் பங்கேற்புடன் 5 இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.