சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்சுலின் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹனுமான் ஜெயந்தி யாத்திரையின் போது, தனது இரு கைகளிலும் இன்சுலினுடன் ஹனுமான் வேடமிட்ட ஒருவர் கலந்துகொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்த யாத்திரையில் டில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சவுரப் பரத்வாஜ் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது சிறை நிர்வாகத்தின் செயற்பாடுகளையும் அவர் விமர்சித்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிருக்கு “அச்சுறுத்தல்” இருந்தபோதிலும் அவருக்கு இன்சுலின் வழங்க திகார் அல்லது மத்திய அரசு தயாராக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.