பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையே மட்டக்களப்பில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை, கனிய வளங்களான இல்மனைட் அகழ்வு, இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான பிரச்சனைகள், மற்றும் சட்டவிரோத காணி அபகரிப்பு சட்ட விரோதமான மீன்பிடி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.