தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது.
மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாளாந்த ஊதியம் 1350 ரூபாவாகவும், நாளாந்த மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகவும் வழங்கப்படும் என்பதுடன், நாளாந்த ஊதியமாக 1700 ரூபாய் வழங்கப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.