ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்திருந்தது
இன்னிலையில் இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கனமழையுடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புவாசிகள், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது துறை மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் கூறப்பட்டு உள்ளது. இதேபோன்று, மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் இணைய வழி கல்வியை பெறவும், அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.