ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த பலர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமையினாலேயே இவ்வாறான நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாhர். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
கட்சியில் அங்கம் வகித்த பலர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமையினாலேயே இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா தற்போது அந்த கட்சி பணத்திற்கு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலை தொடர்பாக நாம் கவலையடைகின்றோம்.
நாம் 90 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்.
இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள் எவரும் அப்போது இருக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதல் தவிசாளர் பதவி தொடர்பாக நாளை நீதிமன்றம் தீர்மானமும் வெளியாகவுள்ளது.
அதன்பின்னரே விஜயதாச ராஜபக்ஷவின் பதவி நிலை தொடர்பாக அறிந்து கொள்ள முடியும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேலும் தெரிவித்தார்.