எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன பெரமுன நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ளுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொதுஜன பெரமுன மக்கள் ஆதரவு அதிகம் உள்ள கட்சியாகும்.
நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்வோம்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக முன்னிலையானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன்.
பொருத்தமான ஒருவரையே நாம் தெரிவு செய்வோம். கடந்த காலங்களில் நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருந்தது.
இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்க.
நாட்டைச் சிறந்த முறையில் வழிநடத்தி சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தை பேணக்கூடிய ஒருவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மேலும் தெரிவித்தார்.