வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒரு நபருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசாவை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவுத் திணைக்களம் ஏற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.