அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை, ஒலுவில், நிந்தவூர்,மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி, உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனே பயணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இம்மாவட்டத்தில் உள்ள வாவிகள் குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.