வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சம்பள அதிகரிப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தாலும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மத்திய மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் எதிர்வரும் 13ஆம் திகதியும் சப்ரகமுவ மாகாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதியும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கப்போவதாக சுகாதார தொழிற்சங்கங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு மூடப்பட்டு இருப்பதை இன்று காலை அவதானிக்க முடிந்தது.