தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மாத்திரமே தற்போதைய ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாட்டு மக்களை ஏமாற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையிடும் ஊழல் ஆட்சிக்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
போராட்டம் ஒன்று நடத்துவதனால் அல்லது தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மாத்திரமே தற்போதைய ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
69 லட்சம் மக்களின் வாக்குகளினால் ஆட்சிக்கு வந்தவரும் ஊழல் மோசடி காரணமாக நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்.
ஆனால் அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவான ஒருவரிடம் நாட்டை ஒப்படைத்து சென்றார்.
நாட்டு மக்கள் இந்த அரசாங்கம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.