பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆதன்படி, கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் ஆட்சேபனையினை தெரிவிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்கும் வகையில், தொழில் ஆணையாளரால் கடந்த 30 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஆனால், குறித்த வர்த்தமானி தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளோ, ஆட்சேபனைகளோ கிடைக்கவில்லை என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள 1700 ரூபா தொடர்பிலான, ஆட்சேபனைகள் அல்லது எதிர்ப்புகளை தெரிவிக்கும் கால அவகாசம் நாளை நிறைவடைந்த பின்னர், அது தொடர்பிலான அறிக்கையை தொழில் அமைச்சருக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.