நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து விடுதலை செய்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதுடன், எதிர்வரும் 2020 உலகக் கிண்ணத்தில் இணையும் வாய்ப்பையும் பெறுவுள்ளார்
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்தால், சந்தீப் தனது உலக கோப்பை அணிக்கு பரிந்துரைக்கப்படுவார் என நேபாள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
18 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் லமிச்சேன் குற்றவாளி என ஜனவரி 10ஆம் தேதி காத்மாண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் அவருக்கு $2,255 அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவருக்கு $1,500 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இன்னிலையில் இந்த மாத தொடக்கத்தில், சந்தீப் லாமிச்சேன் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார், மேலும் சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள அவரை சிறையில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.