அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்பு கார்களை கண்காணிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன வாகனங்கள் அமெரிக்கர்களின் தரவுகளின் பாதுகாப்பில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்னிலையில் சீன வாகனங்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் குறிப்பிடும் சட்டத்தை வரும் மாதங்களில் தனது துறை கொண்டு வரும் என்று அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கருத்துப்படி இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.