ஒரு கிலோ தேசிக்காயின் விலை 3000 ரூபாவை தாண்டியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தம்புள்ள உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக தேசிக்காயின் விலை அதிகரித்து வருகின்றதாகவும் இந்நிலையில், நேற்றையதினம் ஒரு கிலோ தேசிக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
போதியளவு தேசிக்காய் கிடைக்காத காரணத்தால் இந்த நாட்களில் தேசிக்காயின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விலைக்கு தேசிக்காய்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்ய முடியவில்லை என சில்லறை வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் தேசிக்காயின் விலை 5000 ரூபா வரை தாண்டும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.